Sunday, March 22, 2009

ஒரு மாணவனின் டவுன் பஸ் அனுபவங்கள்


கடந்த நான்கு ஆண்டுகளில் நிறைய ஊர் சுற்றி விட்டேன் . பெரும்பாலும் அனைத்துமே டவுன் பஸ் பயணங்கள் , நினைத்து நினைத்து அசை போட கூடிய பயணங்கள்
மேல்மருவத்தூர் - திருத்தணி ரூட்டு :
என் கல்லூரி இருக்கும் மேல்மருவத்தூர் இல் இருந்து ஒவ்வொரு வார இறுதியிலும் நான் என் ஊருக்கு செல்வது வழக்கம் .நான்கு மணி நேரத்தில் மூன்று டவுன் பஸ் மாறி பயணம் செய்ய வேண்டும் ,பெரும்பாலும் பயணங்கள் தனிமையில் தான் . ஒவ்வொரு பஸ் இலும் ஏதாவது ஒரு பெண்ணை focus செய்து கொள்வேன் .. பிறகு என்ன நா பாக்க அவ பாக்க நேரம் போனதே தெரியாது .. இந்த வழியில் இரண்டு தொல்லைகள் உண்டு

முதல் தொல்லை :
இந்த பேருந்துகளில் நிற்க கூட இடம் இருக்காது ,அதுவும் என் கையில் luggage இருந்தால் அவ்வளவுதான் .. தொலைந்தேன் ! கண்டக்டர் முதல் பயணம் செய்யும் ஆயா வரை திட்டி தீர்ப்பார்கள் ! " இந்தாப்பா டேய் இந்த மூட்டய தள்ளிவை ! ,.... யோவ் bag தூக்கி எங்கயாவது போட்டு தோல " போன்ற நச்சரிப்புகள் அதிகம் ..
இரண்டாம் தொல்லை :
ஒரு நாள் முழுக்க கல்லூரியில் அல்லல்பட்டு , வண்டியில் நிற்க கூட இடம் கிடைக்காமல் , பிளான் போட்டு ஒரு இடத்தை பிடித்து உட்காருவேன் , இரண்டு நிமிடம் கூட ஓடி இருக்காது அதற்குள் யாரவது ஒரு aunty வந்து அந்த seat ஐ கேட்கும் .. பக்கத்தில் இருக்கும் ஆண் சிங்கங்கள் கர்ஜிக்கும் " யோவ் ஸ்டாண்டிங் ல வாப்பா " அப்புறம் என்ன? எழுந்து நிற்க வேண்டியது தான்!
மேல்மருவத்தூர் - சென்னை ரூட்டு :
என் ப்ராஜெக்ட் காரணமாக இந்த வழியில் பல முறை பயணம் செய்து விட்டேன் .. இதுவும் ஒரு டவுன் பஸ் பயணம் தான் .. கூட்ட நெரிசலால் பெரும்பாலும் படிகளில் உட்கார்ந்து தான் நானும் என் நண்பனும் பயணம் செய்வோம் .. பேருந்து செல்லும் வழி தேசிய நெடுஞ்சாலை என்பதால் அடிக்கடி விபத்துகளை பார்க்க முடியும் .. அடிபட்டு இறந்து கிடப்பவர்களுக்காக ஒரு நிமிடம் கண்களை மூடி வேண்டி கொள்வேன் ..

இந்த வழியில் நிறைய கல்லூரிகள் உண்டு .கல்லூரி முடிந்து செல்லும் மாணவிகளை பார்ப்பேன் .. நேர்த்தியாக அணிய படாத உடைகளுடன் , குனிந்த தலை நிமிராமல் செல்லும் என்னுடைய கல்லூரி பெண்களை போல அல்ல அவர்கள் ... ஜீன்ஸ் பான்ட் அணிந்து சக மாணவர்களுடன் அரட்டை அடித்து கொண்டோ , அல்லது கை கோர்த்து கொண்டோ அவர்கள் செல்வார்கள் ... இந்த மாதிரி காட்சிகளை தாம்பரம் subway மற்றும் ரயில் நிலையத்தில் காணலாம் .. கண்டிப்பான கல்லூரியில் படிக்கும் என்னை போன்றவர்களுக்கு வயித்தெரிச்சல் தான் மிச்சம் !!!

இன்னொரு நாள் கட்சி பொது கூட்டம் ஒன்றில் சிக்கி , பேருந்து கிடைக்காமல் இரவு பத்து மணி வரை தாம்பரத்தில் அல்லல்பட்டு கடைசியாக கிடைத்த வண்டியில் தொற்றி கொண்டதும் , கூட்ட நெரிசலில் என் நண்பன் மணி கூறிய " பொன்னியின் செல்வன் " நாவல் கதையால் பயணம் இனிமையாக கழிந்ததும் என்னால் மறக்க முடியாத அனுபவங்கள் .இரவு பயணங்களில் கதை கேட்பதே தனி சுகம் தான் ....
இன்னும் பிற அனுபவங்கள் :
டவுன் பஸ் பயணங்களில் இன்னும் பல அனுபவங்கள் உண்டு .. மஹாபலிபுரம் செல்லும் போது , படியில் தொங்கியபடி சென்ற என் தலையில் ஒரு குடிகாரன் வாந்தி எடுத்தது , கூட்டம் அதிகம் இல்லாத வண்டியில் என்னிடம் சில்மிஷம் செய்த ஓரின செயட்கையாலனை ( homo) அடித்து விரட்டியது போன்ற பல சம்பவங்கள் நினைவில் உள்ளது .

சில மாதங்களுக்கு முன்னர் நமது மாண்புமிகு முன்னால் குடியரசு தலைவர் கலாம் , sukoi என்னும் அதி நவீன போர் விமானத்தில் பறந்து சாகசம் புரிந்தார் .. அதைவிட பெரிய சாகசம் புரிய அவர் விரும்பினால் டவுன் பஸ் இல் பயணம் செய்யட்டும் ... ஒரு வழியில் என் வாழ்கையில் பல அனுபவங்களுக்கும் , பலதரப்பட்ட மக்களின் அறிமுகதிட்கும் காரணமாய் அமைந்தது என்னுடைய டவுன் பஸ் பயணங்கள் தான் .. எவ்வளவு தொல்லைகள் இருந்தாலும் நான் அதில் பயணம் செய்யவே விரும்புகிறேன் !