Thursday, October 1, 2009

நடத்துனன் ஆவி ....


நான் என் கல்லூரி பேருந்து நிறுத்தத்தை அடைந்தபோது மணி இரவு 10.10 .. சுத்தமாக அங்கே ஆள் நடமாட்டமே இல்லை .. டிசம்பர் மாத குளிரில் எனது காய்ச்சல் இன்னும் 2 டிகிரி எகிறியது ... அறையைவிட்டு கிளம்பும்முன் முத்து சொன்னான் ..
" டேய் இன்னும் ரெண்டு நாள் ல practicals டா .. அதுவும் உனக்கு காய்ச்சல் வேற 110 கிலோமீட்டர் பயணம் செஞ்சு வீட்டுக்கு போக போறியா ? என்றான் ...

" இல்லடா .. வீட்டுக்கு போனாதான் இது சரி ஆகும் ... நைட் பஸ் ஒன்னு இருக்கு டா .. எனக்கு தெரியும் நா பாத்துகறேன் "

நான் எதிர்பார்த்த பேருந்து வரவே இல்லை ... சரி .. அறைக்கு திரும்ப முடிவு செய்த வினாடியில் என் அருகில் ஒரு பேருந்து வந்து நின்றது ... வண்டியின் முகப்பு விளக்குகள் அனைக்கபட்டிருந்தது .. முகப்பில் "காளிங்கா டிராவல்ஸ் " என்பது சன்னமான இருளில் தெரிந்தது... "சார் திருத்தணி போகுமா என நடத்துனரிடம் கேட்டேன் .. "போகும் ... ஏறு ..." அதட்டலாய் பதில் வந்தது ..

வண்டிக்குள் ஏறிய எனக்கு சற்றே திகைப்பு .. அதில் என்னை தவிர பயணிகள் யாருமே இல்லை ... ம்ம் .. இன்னும் 10 நிமிடத்தில் மதுராந்தகம் வரும் .. அடுத்து செங்கல்பட்டில் கூட்டம் ஏறலாம் என நினைத்துக்கொண்டேன் ... செங்கல்பட்டில் இருந்து காஞ்சிபுரம் வழியாக இரண்டுமணி நேரத்தில் எங்கள் ஊரை அடையலாம் .. நான் கணக்கு போட்டுகொண்டிருந்த நேரத்தில் வண்டி சரேலென இடபக்கமிருந்த இருண்ட சாலையில் திரும்பியது .. எனக்குள் பயம் படர ஆரம்பித்தது , நடத்துனரிடம் கேட்டேன் .. "சார் வண்டி எந்த ரூட்ல போகுது ? உத்திரமேரூர் வழியாவா ? ... "ஆமா " மீண்டும் அதட்டலாய் பதில் சொன்னான் ..
" சார் டிக்கெட் .... எவ்ளோ சார் " .. " 38" .. நான் இரண்டு இருபது ரூபாயை நீட்டினேன் ...

அவன் கொடுத்த பயண சீட்டையும், சில்லறையையும் பார்த்ததில் எனக்கு காய்ச்சல் அதிகமாகியது .. வரிசை எண் , வண்டியின் பெயர் , விலை .. இப்படி எதுவுமே அதில் இல்லை .. மாறாக ஏதோ விகாரமாய் பெரிய தலையுடன் ஒரு உருவம் வரையப்பட்டிருந்தது ... உருது போன்ற எழுத்துக்கள் அதில் இருந்தன .. அவன் கொடுத்த சில்லறையில் 2 என இருந்தது .. ஆனால் அப்படியொரு 2 ரூபாய் நாணயத்தை நான் இதுவரை பார்த்ததில்லை ... சில்லறையின் மறுப்பக்கம் பயண சீட்டில் இருந்த அதே விகாரமான தலை பொறிக்கபட்டிருந்தது ...

பயயுகத்தில் நான் சிக்கி இருந்தேன் .. பேருந்தில் ஏறி 1 மணிநேரத்திற்கும் மேல் ஆகியும் இன்னும் எங்கேயும் நிற்கவில்லை .. அதே சீரான வேகம் ... இருபக்க ஜன்னலிலும் ஒரு பொட்டு வெளிச்சம் கூட இல்லை .. அத்துவான காட்டில் வண்டி போவது போல இருந்தது ... காய்ச்சல் பொறுக்க முடியாமல் நான் முணங்க ஆரம்பித்தேன் .. கண்கள் இருண்டு , உட்கார முடியாமல் சால்வையை போர்த்திக்கொண்டு படுத்தேன் ... முத்துவிடம் பேசினால் தேவலாம் போல இருந்தது .. செல்பேசியை எடுத்து பார்த்தால் சுத்தமாக சிக்னல் இல்லை ... எனக்கு பயத்தில் அழுகை வந்தது ... நெருப்பில் ஏதோ கருகும் வாடை பரவியது .. என் உடலின் உஷ்ணம் அதிகரித்ததால் செயலற்று கண்களை மூடிக்கொண்டேன்

சற்று நேரத்தில் அந்த நடத்துனன் என்னை நோக்கி கடுமையான முகத்துடன் வருவது போல் இருந்தது .. " சார் வண்டி எந்த ரூட் ல சார் போகுது .. கிளம்புனதுல இருந்து இன்னும் ஒரு ஊர் கூட வரலையே " என கேட்டேன் ... அவன் எதுவும் பேசாமல் இறுகிய முகத்துடன் என்னை கடந்து சென்றான் .. பேருந்தில் எரிந்த விளக்குகள் திடீரென அணைக்கப்பட்டன .. இருட்டு ! இருட்டு ... ! வெளியேயும் ,உள்ளேயும் வித்தியாச படுத்த இயலாத இருட்டு ... இதற்குமேல் எனக்கு பொறுமை இல்லை .. தெம்பை வரவழைத்து அந்த நடத்துனனிடம் சென்றேன் ..

" சார் வண்டிய கொஞ்சம் நிறுத்துங்க .. நா urine போகணும் .. "
அவன் என்னை சட்டையே செய்யாமல் இருந்தான் ... ஓட்டுனரை பார்த்த நான் அதிர்ச்சியில் உறைந்து போனேன் .. அவனுக்கு இரண்டு கால்களுமே இல்லை .. accelerator இல் ஒரு பெரிய கல் வைத்து கட்ட பட்டிருந்தது ...
" யோவ் நி இப்ப நிறுத்த போறியா இல்லையா டா ? " நடத்துனரின் சட்டையை பிடித்த எனக்கு " பளார் "! என ஒரு அறை விழுந்தது .. நான் சுருண்டு விழுந்தேன் ...

கண் முழித்து பார்த்த என்னால் நம்ப முடியவில்லை .. ஆம் .. நான் இருந்தது என் வீட்டில் , என் அறையில் .... என்னை திட்டியபடியே அம்மா அறைக்குள் நுழைந்தாள் ..." ராத்திரி மூணு மணிக்கா வருவ ? .. காலைல கெளம்பி வந்து இருக்கலாம் ல ? ...

"காய்ச்சல் அதிகமா இருந்துதுன்னு வந்தேன் ... "
" காய்ச்சல் வச்சிகிட்டா 11 தோச சாப்ட ? ... "
" 11 ஆ? ....... !
"ஆமா டா .. மனுஷன் மாதிரியா சாப்ட நீ ? ..."

நா எப்படி இங்க வந்தேன் ... எனக்கு தலை சுற்றியது ... நேற்று இரவு நடந்தவை கண் முன்னே நிழலாய் வந்து போயின ....

" ஹரி உங்க காலேஜ் பக்கத்துல , பஸ் accident ஆச்சாமே .. பேப்பர் ல போட்டு இருக்கு பாத்தியா ? .. அதை பிடுங்கி படித்தேன் ..

பேருந்து
விபத்து : இருவர் பலி...
நேற்று காலை சுமார் பத்து மணியளவில் அச்சரபாக்கம் அருகில் நின்று கொண்டிருந்த பேருந்தில் லாரி மோதியதால் , பேருந்து நடத்துனர் , ஓட்டுனர் பலி .. என அச்சிடபட்டிருந்தது .. கட்டம்கட்டிய படத்தில் தர்மராஜ் என்ற பெயரில் அந்த நடத்துனன் முறைத்து கொண்டிருந்தான்
சிதைந்து போன பேருந்தின் முகப்பு படத்தில் " காளிங்கா டிராவல்ஸ் " என எழுதபட்டிருந்தது.