Tuesday, May 19, 2009

சில கேள்விகளும், ஒரு முடிவும்.


நீ என்னுடைய நாயகன் இல்லை ... நீ என்னுடைய தலைவனும் இல்லை
உன்னை சிலர் நாயகன் என்பர் .. சிலர் தலைவன் என்பர் ...
சிலர் உன்னை கொலையாளி என்பர், பயங்கரவாதி என்பர்..
தந்திரக்காரன் என அப்பா சொன்னார் , முட்டாள் என செய்தி தாளில் படித்தேன் .


இங்கு இருக்கும் பலர் தங்களின் பிள்ளைக்கு உன் பெயரை வைத்ததாக
பெருமையாக சொன்னார்கள் .. ஆனால் இப்போதெல்லாம் அவர்கள் அதை பற்றி பேசுவது கூட இல்லை .. காரணம் என்னவோ ? நான் அறியேன் .....
அவர்களின் பெருமையை கெடுப்பது போல எதையாவது செய்தாயா நீ ?!

எல்லா வாரமும் நீ என் வீடு தேடி வருகிறாய் .. வார பத்திரிகையில் வரும் உன்னை பற்றிய தொடர்களால் ....
டீக்கடையில் தொங்கும் சுவரொட்டியில் பளீரென என்னை பார்த்து சிரிக்கிறாய் சில நேரம் முறைத்தபடி எதையோ சொல்ல விளைகிறாய் ..

உன் பெயரில் எனக்கு நிறைய நண்பர்கள் உண்டு , அவர்களை அழைக்கும்போது சில நேரங்களில் உன் நினைவும் வருவதுண்டு ..
இரண்டாம் வகுப்பில் , பாட்சா பட சுவரொட்டியை பார்த்ததில் இருந்து ரஜினியின் பெயர் எனக்கு தெரியும் .. அது போல உன் பெயர் எப்போது என் மனதில் பதிந்தது என தெரியவில்லை ... ஒருவேளை அதற்கும் சிறுவயதில் என் தந்தை கூறிய கதைகளால் நீ எனக்குள் பதிந்து இருக்கலாம் ....

எது எப்படியோ ... அநீதியை எதிர்த்து மாண்டவர்களின் மரணம் வீரமரணம் என்றால் ..... உன் மரணத்தை குறிக்க அதை விட சிறந்த சொல் வேறு உண்டா என்ன? .....

1 comment:

mani said...

oruvanin maranathilthan unaku alagana kavithai varuma.......